ஜெர்மனி: பாதசாரிகள் கூட்டத்தில் கார் புகுந்த விபத்தில் ஒருவர் பலி

304 0

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹெய்டல்பர்க் நகரில் சாலையோரமாக நடந்து சென்ற பாதசாரிகள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓடிய கார் புகுந்த விபத்தில் 73 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெர்மனி நாட்டிம் தென்மேற்கு பகுதியில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றான ஹெய்டல்பர்க் நகரின் கடைவீதிகள் வழக்கம்போல் நேற்றும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தன. இங்குள்ள பிரபல பேக்கரி வாசலில் ஏராளமான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.

அப்போது, அருகாமையில் உள்ள பிரதான சாலை வழியாக வேகமாக வந்த ஒருகார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக, நடைபாதையில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் கூட்டத்துக்குள் புகுந்தது. பலரை மோதித் தள்ளிச் சென்ற அந்த காரின் சக்கரத்தில் சிக்கி, ஜெர்மனியை சேர்ந்த 73 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சுமார் 40 வயது நபரும், போஸ்னியா ஹெர்ஸெகோவினா நாட்டை சேர்ந்த சுமார் 30 வயது பெண்ணும் படுகாயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.