காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜின் துப்பாககி சூட்டுச்சம்பவ சூத்திரதாரிகளைக் கைது செய்யுமாறு கோரி இன்று காலை வில்ராஜின் பிறந்த ஊரான கிரான்குளத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கிரான்குளம் தமிழ் மக்கள் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யபபட்ட இந்த ஆர்பாட்டம் மட்டக்களப்பு—கல்முனை பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கிழக்கு மாகாண பிரதி சபாநாயகர் பிரசன்னா நித்தியானந்தன் இந்திரகுமார் உட்பட அரசியல் பிரமுகர்களும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
நல்லாட்சி அரசே நீதி வழங்கு—ஜனாதிபதி அவர்களே சட்ட நடவடிக்கை எடுங்கள் – குற்றவாளிகளைக் கைது செய் உட்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்பாட்டக்காரர்கள ஏந்தியிருந்தனர்.
பெரும் எண்னிக்கையிலான காவல்துறையினரும் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.