கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக உரும்பிராய் பங்கு திருச்சபை மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

282 0

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக உரும்பிராய் பங்கு திருச்சபை மக்கள் ஒன்று சேர்ந்த கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இன்று காலை 7.30 தொடாக்கம் 9 மணி வரையில் இந்த கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.