ஆப்கானில் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டுக்கொலை

117 0

ஆப்கானின் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்

காபுலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேர்சல் நபிசாடா என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரையும் அவரது பெண் மெய்ப்பாதுகாவலரையும் இனந்தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்த தாக்குதலின் போதுஅவரது சகோதரரும் சகோதரரின் மெய்ப்பாதுகாவலரும் காயமடைந்துள்ளனர்.

நபிசாடாவும் அவரது மெய்ப்பாதுகாவலரும் வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர் என காபுல் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

தலிபான் ஆட்சியை கைப்பற்றிய பின்னரும் காபுலில் தங்கியிருந்த ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களில்  சுட்டுக்கொல்லப்பட்டவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஆப்கானிற்காக அச்சமற்று குரல்கொடுத்த ஒருவர்  ஆப்கானிலிருந்து வெளியேறுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை அவர் நிராகரித்திருந்தார் என அவரது முன்னாள் சகாக்கள் தெரிவித்துள்ளனர்.

நபிசாதா வெளிப்படையாக பேசும் பெண் வலிமையானவர் ஆபத்தின் போதும் கூட தான் நம்பியதை கடைப்பிடித்தவர் ஒரு முன்னுதாரணம் என அவரின் சகாவொருவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அவர் ஆப்கானில் தங்கியிருக்க தீர்மானித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் துயரமடைந்துள்ளேன் உலகம் இதனை அறியவேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹனா நெஹ்மன் தெரிவித்துள்ளார்.