சிங்கள மொழிப் பயிற்சி ஆசிரியர்களை இணைக்க வடக்கு ஆளுநர் பணிப்புரை

161 0

 

இரண்டாம் மொழி சிங்கள டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஒரு பகுதி  மாணவர்களை  வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்து மேலதிக பயிற்சிகளை பெற்ற மாணவர்களே இவ்வாறு பாடசாலைகளில் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் இந்த பௌத்த பேரவையில் ஆசிரியராக கடமையாற்றும்  ஆசிரியர் சுமெக்சன்  இந்த பௌத்த பேரவையினால் நடாத்தப்டுகின்ற இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை சுமார் 23,000 மாணவர்கள் இதுவரை கற்றுள்ளனர்.

அதன் முதற்கட்டமாக மேலதிக பயிற்சிகளை பெற்ற ஒரு பகுதி மாணவர்களை தற்காலிக ஆசிரிய பயிற்ச்சியாளராக வட மாகாண ஆளுநர் நியமிக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றியை தெரிவிப்பதுடன் அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ் இராமச்சந்திரனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.