காணிப்பிரச்சினைக்கு தீர்வைக்‌ காண்பதற்கான முதற்கட்ட நடவடிக்கை – அங்கஜன்

121 0

மக்களின் நீண்ட காலப் பிரச்சினையாகவுள்ள காணிப்பிரச்சினைக்கு தீர்வைக்‌ காண்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ஜனாதிபதியின் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணிவிடுவிப்பு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இராணுவத்தின் வசமுள்ள காணிகள் மற்றும் வளவளத்திணைக்களத்திடமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் காணப்படுகின்ற 80 ஏக்கர் காணிகளயும் இவை பல பிரிவுகளாக காணப்படுகின்றது.

அதேபோல் கடற்படையினரிடம் உள்ள 30 காணிகளையும் விடுவிப்பதற்கான சம்மதத்தை தெரிவித்துள்ளார்கள் அதேபோன்று வளமான மண் உள்ள பலாலி கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விவசாய செய்கையை முதன்மைப்படுத்துவதற்கு விடுவிப்பதற்கும் அதற்கு அண்மையுள்ள விமானத்தளத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் விடுவிப்பதற்கு அடுத்தகட்ட கலந்துரையாடல் நடாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று நகர்கோவில் மற்றும் நெடுந்தீவிலுள்ள வனவளத்திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு உடனடியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வ லியுறுத்தினோம்.

குறிப்பாக வனவளத்திணைக்களத்தினர் தங்களது தவறான முறையில் கொழும்பில் இருந்தவாறே G.P.S மூலம் அளவீடு வர்த்தமாணியில் பிரசுரித்துள்ளோம் இதனை சீர் செய்து மீள வர்த்தமாணியில் அறிவிக்கவேண்டும் என்பதை தெரிவித்துள்ளார்கள்.

இதனை வேகப்படுத்துமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு அறிவித்துள்ளார். இது விரைவாக நடைபெறும். என்னைப்பொறுத்தவரையில் எமது மக்களின் நீண்ட கால பிரச்சினையாகவுள்ள காணிப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு முதற்கட்ட நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளது என்பதை நான் நம்புகின்றேன் என்றார்.