களுத்துறை போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சட்ட வைத்திய அதிகாரியின் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர் பயணித்ததாக கூறப்படும் கார் நேற்று முன்தினம் (ஜன. 14) களுத்துறை பாலத்துக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.