சீனாவில் தீ விபத்து – 10 பேர் பலி

291 0

சீனாவில், அடுக்குமாடி ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

அண்டை நாடான சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள நான்சாங் நகரில், பிரபல அடுக்குமாடி ஓட்டல் உள்ளது. இதன் இரண்டாவது தளத்தில், தொழிலாளர்கள், உள் அலங்கார பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். இயந்திரங்களை இயக்கி பணி செய்து கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக, அங்கு தீப்பற்றியது.

அந்த தளம் முழுவதும், தீ பற்றி எரிந்தது. ஓட்டலை ஒட்டி, 24 மாடிகளை உடைய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. ஓட்டலில் ஏற்பட்ட தீ, அந்த கட்டடத்திற்கும் பரவ ஆரம்பித்தது.

இதனால், அங்கிருந்து மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், இந்த விபத்தில், 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் அவர்களில் பலர் தொழிலாளர்கள்.

இந்த விபத்தில், 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.