அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் தாக்கல் செய்த ரிட் மனு ஒன்றை இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி உரிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, மனுவின் பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் அறிவிப்பு விடுத்துள்ளது.
பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, இராணுவ கட்டளை தளபதி, மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் பொது ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஆகிய 18 பேர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பந்துல குணவர்தன, காமினி லோககே, ஜனக பண்டார தென்னகோன், பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர, சிறிபால கம்லத், எஸ்.எம், சந்திரசேன, ஷெஹான் சேமசிங்க, ரோஹித அபேகுணவர்தன, கோகிலா குணவர்தன, சஹான் பிரதீப் உள்ளிட்ட 39 அரசியல்வாதிகளினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.