முகமது அலியின் மகனிடம் விமான நிலையத்தில் விசாரணை

305 0

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலி, கடந்த ஆண்டு காலமானார்.

குத்துச்சண்டை போட்டிகளில் பல சாதனைகள் படைத்ததின் மூலம், அலியின் புகழ் உலகெங்கும் பரவியது.

அவரது இரண்டாவது மனைவி, கலிலா கமாச்சோ அலி மற்றும் அவரது மகன், முகமது அலி ஜூனியர் ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரீபியன் தீவு நாடான ஜமைக்கா சென்று திரும்பிய போது, அலியும் அவரது தாயாரும் புளோரிடா விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய பின்னரே, அவர்களை விடுவித்தனர்.

இது, அமெரிக்க வாழ் முஸ்லிம்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளின் விளைவாகவே இதுபோன்ற கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.