முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக புலம்பெயர்ந்த மக்களும் தொடர்ச்சியாக கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று மாலை மேற்கு அவுஸ்ரேலிய நகரான பேர்த்திலும் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக போராட்டம் இடம்பெற்றுள்ளது.
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்ஸ், ஜெர்மன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் புலம் பெயர்ந்த மக்களால் தொடர்ச்சியாக கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.