அதிகாரத்திற்கு வரும் அரசாங்கம் பொதுமக்களின் சுகதுக்கங்களை கவனிக்கவில்லை என்றால் மக்கள் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்களின் அமைப்பினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மக்கள் நாட்டின் அரசாங்கத்தை அமைக்கின்றார்கள்.
அவ்வாறு அமைக்கப்படும் அரசாங்கம் மக்களின் நலன்களின் அக்கரை செலுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லையேல் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராடுவார்கள்.
இல்லையேல் அடுத்த சந்ததியினர் அரசியல் அமைப்புக்கு எதிராகவே கிளர்ந்தெழுவார்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.