சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட நிபந்தனை – ஒன்றிணைந்த எதிர்கட்சி

330 0

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனில் ஒரு நிபந்தனை பூர்த்திச் செய்யப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும இதனைக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட, ஒன்றிணைந்த எதிர்கட்சி தயாராக உள்ளது.
எனினும், இந்த அரசாங்கத்தில் உள்ள அனைத்து சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும் வெளியே வரவேண்டும்.

அவ்வாறு அவர்கள் வெளியேறும் போது தம்மால் சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் டலஸ் அழகபெரும குறிப்பிட்டார்.