நீதிபதிகள் நியமனம் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானங்கள் தமது சங்கத்தின் தேர்தலை அடுத்து மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் அமில ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் அடுத்த மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இந்த தேர்தல் நடத்தப்படவிருந்தது.
எனினும் இலங்கை நீதிபதிகள் சங்கம், தேர்தலை நடத்த பங்களிப்பு செய்யாத நிலையில் தேர்தல் பிற்போடப்பட்டதாக சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.