மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக நோயாளர்களின் வாழும் உரிமைக்கு அச்சம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

308 0

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக நோயாளர்களின் வாழும் உரிமைக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் மாகாண ரீதியாக மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டம் நாளைய தினம் வயம்ப மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் வயம்ப மாகாணத்தில் உள்ள சகல மருத்துவமனைகளிலும் அடையாள பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமந்த ஆனந்த குறிப்பிட்டார்.