தேசிய சுதந்திர முன்னணிக்கு கொள்கையோ அரசியல் நிலைப்பாடோ கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் அஜீத் பீ. பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
களுத்துரை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விமல் வீரங்ச சுயாதீனமாக செயற்பட வேண்டும் என கூறுகின்றார்.
தேசிய சுதந்திர முன்னணிக்கு கொள்கையோ அரசியல் நிலைப்பாடோ கிடையாது.
அவர்கள் எதிர்காலத்தில் தனிமைப்பட்டு கிடப்பதை காட்டிலும் தற்போதே தனியாக இருப்பது ஒன்றும் தவறில்லை என்றும் அஜீத் பீ.பெரேரா குறிப்பிட்டார்.