அனைவர் வாழ்விலும் வளமும் நலமும் கிடைத்திட பிரார்த்திப்போம்!

108 0

அன்பு, நேசம், நல்லிணக்கத்தால் இனங்களை பிணைக்கும் தைத்திரு விழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி மற்றும் வளத்தை கொண்டு வர வேண்டும்.

வளமும் நலமும் பலமும் பெற்று சுபீட்சமான இன்ப வாழ்வும் வளர்ச்சியும் அமைய வேண்டும் என அன்பே உருவான பரம்பொருளை வேண்டி பிரார்த்தனை செய்வதாக இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் அமைப்பின் சிவஸ்ரீ. ச. சாந்தரூபக்குருக்கள் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள தைத்திருநாள் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

அதில் மேலும் கூறியுள்ளதாவமது,

தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை உழவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த திருவிழாவாக உள்ளது.

தமிழர்களால் கொண்டாடப்படும் பல பண்டிகைகளில் மதத்துடன் தொடர்புபடுத்தி சொன்னாலும் அதன் உள்ளே இன்றும் உயிர்ப்புடன் தமிழர்களின் இயற்கையான மெய்யியல் வழிபாடு பொதிந்துள்ளதை காணலாம்.

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்புக்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டுக்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

சூரியபகவான் மகர ராசிக்கு பிரவேசம் செய்யும் காலமாக காணப்படுகிறது. இக் காலப்பகுதியை மகர சங்கராந்தி என அழைப்பர்.

அன்பு, நேசம், நல்லிணக்கத்தால் இனங்களை பிணைக்கும் தைத்திரு விழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி மற்றும் வளத்தை கொண்டு வர வேண்டும்.

வளமும் நலமும் பலமும் பெற்று சுபீட்சமான இன்ப வாழ்வும் வளர்ச்சியும் அமைய வேண்டும் என அன்பே உருவான பரம்பொருளை வேண்டி பிரார்த்தனை செய்து, இந்துக் குருமார் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நிறைந்த நல்வாழ்த்துக்களையும் பகிர்ந்து மகிழ்கின்றோம்.