மாணவர்களுக்கு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலக்கூடிய சூழ்நிலை உருவாக்கக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு உபவேந்தர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், ஒழுக்க நிர்வாகிகள் உள்ளிட்ட சகல தரப்பிரும் ஏனைய நிறுவகங்களுடன் கைகோர்த்து செயற்படும் வேலைத்திட்டம் எதிர்வரும் தினங்களில் நடைமுறைப்படுத்தப்படம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.