நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளையும் நம்பி பயனில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
குருணாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கெண்ட கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்தை விரட்டியக்கத்தான் வேண்டும்.
எனினும் சம்பிரதாயத்தின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி விரட்டப்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொண்டுவரப்படும்.
இனியும் அவ்வாறான செயற்பாடு தேவையில்லை.
இப்போது இரண்டும் ஒன்றாகவே இருக்கின்றன.
இதனால் இரண்டையும் நம்பி பயனில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.