சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சர்ச்சையுடனே தொடங்கியது.
ஜன.10 முதல் 13-ம் தேதி வரைபேரவைக் கூட்டத்தை நடத்தஅலுவல் ஆய்வுக் குழு முடிவுசெய்தது. முதல் நாளில், ஈரோடுகிழக்கு காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் உறுப்பினர்கள், பிரபலங்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
11, 12-ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. விவாதத்துக்கு முதல்வர்நேற்று பதில் அளித்தார். பிறகு, மசோதாக்கள் நிறைவேறின.
நிறைவாக, பேரவையை ஒத்திவைக்க அமைச்சர் கே.என்.நேருகொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேதி குறிப்பிடாமல் பேரவையை பேரவைத் தலைவர் அப்பாவு ஒத்திவைத்தார்.