உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய கடிதம் தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னேவை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.
இதன்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெற வேண்டாம் என தேர்தல் அதிகாரிகளுக்கு தாம் அனுப்பியுள்ள கடிதம் காரணமாக ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருந்தால், மன்னிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னே மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.