எந்தவொரு கட்சிக்கும் உரிமையில்லை – அமைச்சர் சுசில் பிரோமஜெயந்த

264 0

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை பழைய முறையில் நடத்துமாறு கோருவதற்கு நாடாளுமன்றத்தின் எந்தவொரு கட்சிக்கும் உரிமையில்லை என அமைச்சர் சுசில் பிரோமஜெயந்த தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொகுதிவாரி தேர்தல் முறை வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் முறை தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட்டு சில திருத்தங்களை கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் நடவடிக்கை மாத்திரமே எஞ்சியுள்ளது.

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் அங்கிகாரத்துடனேயே புதிய தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை வேண்டாம் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை அவர் கூறியுள்ளார்.