மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பில் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
முறி விற்பனை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பில் தமது பெயர் இணைக்கப்பட்டு தமக்கு அவப் பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ள.
எனவே மத்திய வங்கியினதும், நிதி அமைச்சினதும் இந்த செயற்பாட்டிற்கு எதிராக தாம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.