வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க, ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை….(காணொளி)

326 0

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க, ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள, அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேபோன்று களுதாவளையில் சுடப்பட்டு படுகாயமடைந்த விமல்ராஜ் மீதான தாக்குதல் தொடர்பில், உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் எனவும் எஸ்.வியாழேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.