யாழ்ப்பாண வர்த்தகர் தியாகராஜா துவாரகேஸ்வரனின் முகநூலை தடைசெய்யக்கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் கண்டண பேரணி ஒன்றை நடாத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் கண்டணப்பேரணி எனும் பெயரில் கண்டணப்பேரணியை நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதியில் கொழும்பு யாழ்ப்பாண தனியார் பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு முன்பாக பதாதைகளுடன் கண்டனப்பேரணியை நடாத்தியுள்ளனர்.
கண்டணப்பேரணியின் போது தியாகராஜா துவாரகேஸ்வரனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.
பேரணியில் ஈடுபட்டவர்கள் துவாரகேஸ்வரனின் முகநூலைத்தடைசெய், ஊடகங்களை ஏமாற்றும் ஊடக நாடகம் நடத்தாதே, ஊடக மையம் உனக்கு நாடக மேடையா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கி யாழ்ப்பாணம் பண்ணையிலிருந்து பொலிஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்றடைந்தனர்.
வர்த்தகர் திஜாகராஜா தனது முகநூலின் மூலம் யாழ்ப்பாணம் கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றவர்களை அவதூறான வார்தைகளிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களையும் பரப்பி வருவதாக பேரணியில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக திஜாகராஜா துவாரகேஸ்வரன் தனது முகநூலில் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றார்.
எனவே அவரது முகநூலை தடைசெய்யக்கோரி கண்டனத்தில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாண பொலிசாரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.