பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் விவசாயிகள், தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தமிழகவேளாண்மைத் துறை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக வேளாண்மைத் துறை வெளியிட்டசெய்திக்குறிப்பு: தமிழகத்தில் “பிரதம மந்திரிகிஸான் சம்மான் நிதி’’ திட்டத்தின்கீழ், சொந்தமாக விவசாய நிலம்வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு, 4 மாதங்களுக்கு ஒருமுறைதலா ரூ.2 ஆயிரம் வீதம், 3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த தொகை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் 13-வதுதவணை பெற கட்டாயம் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல்நடப்பாண்டு மார்ச் வரையிலான காலத்துக்கு 13-வது தவணைத் தொகையை ஜனவரி மாத இறுதியில் விடுவிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.