பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் ஆதரவு…. (காணொளி)

387 0

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு இளைஞர்கள் இன்று ஆதரவு வழங்கியுள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன் 26 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

வீதியோரத்தில் வெயிலின் மத்தியில், இரவு வேளையில் கொட்டும் பனிக்கு மத்தியில் 26 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒருங்கிணைக்கப்பட்டு விடுக்கப்பட்ட அறிவித்தலின் மூலம் திரண்ட இளைஞர்கள், கேப்பாபுலவு மக்களின் போராட்ட களத்துக்கு சென்று தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

அத்துடன் இன்றிலிருந்து கேப்பாபுலவில் தங்கியிருந்து போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அத்தோடு கேப்பாபுலவிலும் இளைஞர் புரட்சி ஒன்றினை படைக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.