கோட்டையில் இருந்து தெஹிவளை வரையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

301 0

கோட்டையில் இருந்து தெஹிவளை வரையிலான தொடருந்து போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கரையோர தொடருந்து வீதியில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடருந்து கட்டுப்பாட்டு நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

கொம்பனித் தெரு தொடருந்து நிலையத்திற்கு அருகில் மாநகரசபை மேற்கொள்ளும் புனரமைப்பு பணிகளின் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

எவ்வாறெனினும், காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களுக்கான போக்குவரத்துகள் தெஹிவளையில் இருந்த நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.