1762 வர்த்தக நிலையங்களில் சுற்றி வளைப்பு

256 0

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளின் சுற்றி வளைப்பில் புறக்கோட்டைச் சந்தையில் அரிசியை அதிக விலைக்கு விற்றக்கப்பட்ட 3000 கிலோ கிராம் அரிசியும், காலாவதியான 2600 கிலோ கிராம் அரிசியும் கைப்பற்றப்பட்டதாக  கைத்தொழில் அமைச்சு இன்று) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் ,வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலின் பேரில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணை அதிகாரிகள் மேற் கொண்ட இந்த நடவடிக்கையின் போது 1762 வர்த்தக நிலையங்களில் மேற் கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்ட 1265 மோசடி வர்த்தகர்கள் அகப்பட்டனர்.

இவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றுவெள்ளிக்கிழமை மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது அரிசி விலையை அதிகரித்து விற்க ஈடுபட்ட போதும்  33 வர்த்தகர்களும் அகப்பட்டுள்ளதாகவும் இச் செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.