மட்டக்களப்பு – மாமாங்கம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் இன்று ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாமாங்கம் கிராம சேவை பிரிவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் மாமாங்கம் புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு வைத்தியசாலையில் இருந்து குறித்த நபர் வெளியேறிய அவர், இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டகப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.