கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாக இன்றையதினமும் தொடர்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் கடந்த 20ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்தும் நிலையில் போராட்டம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.