மட்டக்களப்பு, மாமாங்கம் புகையிரத வீதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான க.ஜெயக்காந்தன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதியான ஜெயக்காந்தன் நேற்றைய தினம் வைத்தியசாலையில் இருந்து தப்பி வந்த நிலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்ற அதேவேளை, மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.