கிணற்றில் இருந்த பெண் ஒருவரின் சடலம்

250 0

வாகரை, அமந்தனாவெலி பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சடலத்துடன் கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிதவெலி, அமந்தனாவெலி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.