பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீட முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை கொடுத்த மேலும் சில சிரேஷ்ட மாணவர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் ஈடுட்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பகிடிவதை செய்த மேலும் பலரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கண்டி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.