ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி பிரிந்து செல்வது நல்லதெனவும், எதிர்காலத்தில் இனவாத அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் எனவும் ஐ.ம.சு.மு.யின் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் சில இனவாத கட்சிகள் எம்முடன் இணைந்ததனால் கட்சியின் கொள்கைகள் பாதிக்கப்பட்டன. சுதந்திர ஐக்கிய மக்கள் முன்னணியுடன் கூட்டுச்சேர பல கட்சிகள் தற்பொழுதும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.