ஜெனீவாவில் நேற்றும் இலங்கைக்கு எதிராக முறைப்பாடுகள்

259 0

ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற “பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு”வின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையிலிருந்து சென்ற அரச சார்பற்ற அமைப்பின் (NGO) பிரதிநிதிகள் இருவர், இலங்கை இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பலவற்றை இக்குழு முன்னிலையில் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

வன்னி இறுதிக் கட்டப் போராட்டத்தின் போது வடக்கு பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் வடக்கிலிருந்து இராணுவம் நீக்கப்படாதுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் ஐ.நா. குழு கேள்வி எழுப்பியுள்ளதாகவும் ஜெனீவா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெனீவாவில் இடம்பெற்ற இக்கூட்டத்துக்கு அரசாங்கத்தின் இனநல்லிணக்கம் தொடர்பிலான செயலணியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.