கல்வி அமைச்சில் கேர்ணல் நியமனம், 01 ஆம் திகதி சுகயீனப் போராட்டம்

308 0

கல்வி அமைச்சின் விளையாட்டுப் பிரிவுக்கான புதிய பணிப்பாளராக இராணுவ கேர்ணல் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 01 ஆம் திகதி புதன் கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க கல்வி நிருவாக சேவை ஊழியர்களின் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நியமனத்துக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், வலய, மாகாண, தேசிய மட்ட பாடசாலை ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளிலிருந்தும் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் பிரபாத் விதானகே தெரிவித்துள்ளார்.