ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக பட்ட கடன் தொகையில் 80 வீதமானவற்றை இவ்வருடத்தில் செலுத்தி முடிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை இதற்கு உதவியது எனவும் அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைச் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை முடியாமல் போன காலகட்டத்திலேயே நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் அபிவிருத்தியடையும் போது தெற்கிற்கான சுற்றுலாத்துறையும் அபிவிருத்தியடையும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.