இலங்கை பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் அமைச்சர்கள் முறைப்பாடு

298 0

இலங்கை இரகசியப் பொலிஸாருக்கு எதிராக ஹொங்கொங் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அந்நாட்டுப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொங்கொங்கில் உள்ள இலங்கை இராணுவ அதிகாரியொருவரை அந்நாட்டின் அனுமதியின்றி இலங்கை இரகசியப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதற்காகவே இந்த அமைச்சர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும், இந்த முறைப்பாட்டை இலங்கை இரகசியப் பொலிஸார் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.