மனித கடத்தலுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் இன்று முன்னிலை

264 0

சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பிரதான சந்தேகத்துக்கு உரியவர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்த 18 பேர் நீர்கொழும்பு கடற்பகுதியில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.