வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம்- ரணில்

307 0

தென் மாகாண அபிவிருத்தியின் போது வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம் அமைக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்:
பெந்தரையிலிருந்து காலி கொக்கலை வரை புதிய சுற்றுலா வலயமும் ஸ்தாபிக்கப்படும். களுத்துறை, கண்டி, திருணோகமலை, பொலநறுவை மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். மக்களுக்கு சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்த சமகால அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருகிறது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன்களின் 10 சதவீதத்தை இவ்வருட இறுதிக்குள் செலுத்துவது அவசியம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கடன் தொகை மூவாயிரத்து 600 கோடி அமெரிக்க டொலர்களாகும். அரசாங்கம் காஸ், எண்ணெய் ஆகியவற்றின் விலையை குறைத்துள்ளதுடன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்திருப்பதாக பிரதமர் கூறினார்.