போலி ஆவணங்களை தயாரித்து 25 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்த இரண்டு பேர் கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா விஷேட குற்ற விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போலி காணி உறுதிப்பத்திரம் தயார் செய்து இந்த மோசடியை செ்யதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்புகஸ்கந்த மற்றும் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.