சிறிய குழந்தை ஒன்றுக்கு பலவந்தவாக மது ஊட்டிய நபர் கைது

254 0

சிறிய குழந்தை ஒன்றுக்கு பலவந்தவாக மது ஊட்டிய நபர் ஒருவர் ஒக்கம்பிட்டிய, பஹலகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

2 வருடங்களும் 09 மாதங்க​ளான குழந்தை ஒன்றுக்கு சந்தேகநபர் இவ்வாறு மது ஊட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது குழந்தை மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய ஒருவர் என்பதுடன், அவர் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.