கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குணவு கொடுப்பனவு அதிகரிப்பு

119 0

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுவந்த 20,000 ரூபா போஷாக்கு கொடுப்பனவு திருத்தப்பட்டு, இவ்வாண்டு 45,000 ரூபாவாக வழங்க திருத்தப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கர்ப்ப காலத்தில் 6 மாதங்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது 4 மாதங்கள் என மாதாந்தம் 4500 ரூபா வீதம் 10 மாதங்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு வழங்கப்படும் என பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.