இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலை நடத்துவது தொடர்பில் பேசுவதற்காக அதன் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று காலை கூடியது.
இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் கடந்த 21ம் திகதி இடம்பெற இருந்த போதிலும் அது கால வரையறை இன்றி பிற்போடப்பட்டிருந்தது.