150 சிப்பி மூடைகளுடன் ஒருவர் கைது

257 0

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் இருந்து கிண்ணியா பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொரியில் கொண்டுசெல்லப்பட்ட சிப்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

லொறி ஒன்றில் 150 மூடைகளில் சிப்பிகள் கொண்டு செல்லப்படுவதாக கிண்ணியா பொலிஸாரின் விஷேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிண்ணியா பொலிஸாரால் உப்பாறு பாலத்தடியில் வைத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

அதனை விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவரையும் கைது செய்துள்ளதுடன், இது சம்பந்தமான மேலதிக நடவடிக்கைகளில் கிண்ணியா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.