வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட ராமநாதபுரம் தொகுதியை குறிவைக்கிறாரா பிரதமர் மோடி?

122 0

வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் பரவி வருகின்றன.

அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறும்போது, “பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்பது எங்களுக்கும் விருப்பம்தான். ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை” என்றார். அதேநேரத்தில், ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “கடந்த முறையே மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்தோம். வரும் மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவது உண்மையாகக்கூட இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் ராமநாதபுரத்தில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் பரவியது. அப்போதிருந்தே மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தை மோடி குறிவைத்துள்ளார் என்ற தகவல்கள் கிளம்பிவிட்டன.

மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், ராமநாதபுரத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் விவாதங்கள் நடக்கின்றன. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.