ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை உட்பட இருவர் கைது

270 0

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து ஒரு கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வௌ்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 500 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் 40 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.