ஒரு நாள் கதைசொல்பவரின் கதை சொல்லப்படும்

158 0

தாழ்வாரங்களில் இருந்து அந்த குரல் ஒலிக்கும் – எனக்கு என்ன வைத்திருக்கின்றாய்?Hey bugger, what have you got for me?

வாரஇறுதி பத்திரிகையின் வாரத்தி;ன் நடுப்பகுதி- பணியாளர்கள் அப்போதுதான் அலுவலகத்திற்குள் வருவார்கள்.

நானும் அவர்களில் ஒருவனாக இருப்பேன். செய்தியறிக்கையிடலில் பல நாட்களை செலவழித்த பின்னர் அலுவலகம் வருவேன்.

உங்களிற்கு வழங்கப்பட்ட பணியின் இடையில் உங்களை அழைக்கும் தொடர்புகொள்ளும் பழக்கம் லசந்தவிற்கு இல்லை.

சண்டே லீடரில் பணியாற்றிய காலப்பகுதியில் ஒரேயொரு நாள்தான் அவர் என்னை அழைத்தார்,அன்று கொழும்பில் பத்திரிகையாளர்கள் மீது காடையர்களின் தாக்குதல் இடம்பெற்ற அன்று – அவர் செய்தியறிக்கையிடல் குறித்து எதுவும் தெரிவிக்கமாட்டார்,ஒருசொல்லில் சொல்லுமாறு கேட்பார்.

இரத்மலானையில் அவர் கொல்லப்பட்டு 14 வருடங்களாகிவிட்டன, எனது வாழ்க்கை மீதும் தொழில்துறையின் மீதுமான அவரது தாக்கம் முன்னர் எப்போதையும் விட மிகப்பெரியதாக காணப்படுகின்றது.

கடந்த வருடம் நான் 30000 சொற்கள் கொண்ட கட்டுரையை எழுதி அவருக்கும் எனது பெற்றோருக்கும் சமர்ப்பித்தேன்.

அவர் தாக்கப்பட்டதை கேள்விப்பட்டதும் நான் என்ன செய்தேன் என்பது எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது,நான்  என்னையறியாமல் கமராவை கையில் எடுத்தேன்,கொலை நடந்த இடம் முதல் இறுதிநிகழ்வு இடம்பெற்ற இடம்வரை  எடுக்கப்பட்ட 100 படங்கள் என்னிடம் உள்ளன,நான் ஏன் இதனை செய்தேன் என நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு.

அதற்கான காரணத்தை நான் அறிவதற்கு பல வருடங்கள் பிடித்தன,கமரா எனக்கு ஒரு கவசம் போன்று விளங்கியது.நான் அச்சமடைந்திருந்தேன் நான் பதற்றத்தில் சிக்குண்டிருந்தேன்,என்னை தனிப்பட்ட ரீதியில் பாதித்த இந்த ஈவிரக்கமற்ற குற்றம் குறித்து அறிக்கையிடுவதற்கான நிலையில் நான் இருக்கவில்லை.

ஆனால் அன்று இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.பல வருடங்களாக நான் இந்த கொலை விசாரணை குறித்து அறிக்கையிட்டேன்.எவ்வளவு எழுதினேனோ அவ்வளவிற்கு நான் சீற்றமடைந்த நபராக மாறினேன்.

லசந்த தனது தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து அலட்சியமாக இருந்தது என்னை சீற்றத்திற்குள்ளாக்கியது,அவரை சுற்றியிருந்தவர்கள் எந்த கவலையும் இன்றி அவரது பாரம்பரியத்தை பணமாக்கி கொண்டது குறித்து நான் ஆத்திரமடைந்தேன்.

அவர் தாக்கப்படும் நிலை ஏற்படுதவதற்கு அனுமதித்தமை குறித்து என்மேலும் எனக்கு கோபம் காணப்பட்டது.

லசந்தவின் படுகொலை ஏற்படுத்திய ஆழமான மனக்காயங்களை உணர்ந்துகொள்வதற்கு எனக்கு பல வருடங்கள் எடுத்தன.

நாங்கள் எங்கள் வாழ்க்கையில் எது குறித்து செய்தி வெளியிடுகின்றோம் என்பதை உணர்ந்துகொள்வதற்கு அவரது படுகொலை எனக்கு உதவியது.

இந்த விடயத்தில் லசந்தவின் கொலை செல்வாக்கு செலுத்துவது வேடிக்கையான விடயம்.

நான் சந்தித்த பத்திரிகையாளர்களில் தனது வலி அவமானத்திலிருந்து மகிழ்ச்சியடையும் பத்திரிகையாளர் அவர்.அவர் ஒரு பத்திரிiயாளராக வந்த சகாப்தத்தின் உருவாக்கம்.ஆனால் பலவீனங்களை ஏற்றுக்கொள்வதில் மதம் போன்ற மதுவிலக்கு தன்மையை கொண்டிருந்தார்.

மிகச்சிறந்த செய்தியறிக்கையிடல்கள் உள்ளன ஆனால் அவற்றிற்காக பெரும் விலை செலுத்தப்பட்டது,அவரது மரணமும் ஒன்று.

அவரின் மரணத்தின் 14 வருடங்களின் பின்னர் இந்த குற்றம் எவ்வாறு இழைக்கப்பட்டது என்பது எங்களிற்கு நன்கு தெரிந்த விடயமாக மாறியுள்ளது.

ஆனால் இதுவரை எவரும் பொறுப்புக்கூறச்செய்யப்படவில்லை,அது ஒருபோதும் நிகழப்போவதில்லை.அது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகயிருக்கலாம்.மனிதனின் மர்மம் மற்றும் கட்டுக்கதை.

அது இலங்கையின் இதழியல் துறையில் லசந்தவின் தாக்கத்தின் ஏற்றுக்கொள்ளப்படாத கதை.

இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையாசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு 14 வருடங்களின் பின்னரும் இன்று வரை லசந்த விக்கிரமதுங்கவை அங்கீகரிக்கவில்லை .

ஆனால் லசந்தவின் தாக்கத்தை இலக்குவில்  மறைக்கவோ ஒளிக்கவோ முடியாது.இலங்கையின் பல சிரேஸ்ட பத்திரிகையாளர்கள் அவரின் கீழ் பணிபுரிந்தவர்கள் – அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்- ஏற்றுக்கொண்டாலும்.

அவரது பாரம்பரிய இன்னமும் வடிவமைக்கப்படுகின்றது,இதழியல் துறையில் பல்வேறு தன்மைகளை கொண்டிருந்த இந்த நபரின் முழுக்கதையும் எங்களிற்கு தெரியாது.தனது செய்தியறிக்கையிடல்களில் சிலவேளை அவர் எந்தவித வெட்கமும் அற்று பக்கச்சார்பானவராக காணப்பட்டார்,பத்திரிகை துறையில் நான் கண்ட மிகவும் வெளிப்படைதன்மை மிகுந்த செயல்பாடுகளில் அவை ஒன்றாகும்.

இலங்கையின் வேறு எந்த பத்திரிகையிலும் என்னால் ஐந்து நிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது என அவர் அடிக்கடி நினைவுபடுத்துவார்.

லீடரை தவிர செய்தியறைகளுடனான  எனது மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது அது உண்மை என்றே தோன்றுகின்றது.

அமந்த பெரேரா