அர்ஜென்டினா நாட்டின் சான்ட்டா ஃபே மாகாணத்தில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அர்ஜென்டினா நாட்டின் சான்ட்டா ஃபே மாகாணத்தில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மான்ட்டிகாஸ் நிறுவனத்தை சேர்ந்த அந்த பஸ்கள் துறைமுக நகரமான ரோஸாரியோ நகரில் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டதில் 13 பேர் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் ஒரு விபத்தில், இங்குள்ள மெண்டோஸா மாகாணத்தில் ஒரு பஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.